• நுண்புழை ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுகின்றன.
• பொருள்களை வெப்பப்படுத்தும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
• ஒரு பொருளின் வெப்பநிலை என்பது, அதில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வெப்ப ஆற்றலின் அளவாகும். அது பொருளின் வடிவத்தை சார்ந்ததில்லை.
• வெப்பமும்,வெப்பநிலையும் ஒன்றல்ல, அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகளைக் குறிக்கின்றன.
• ஒரு பொருளின் வெப்பநிலை, துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்ததல்ல.
• ஒரு பொருளின் வெப்பம் என்பது அப்பொருளின் உள்ளாற்றலாகும். அப்பொருளை சூடாக்கி அல்லது குளிர்வித்து அதன் வெப்பநிலையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
• ஒரு பொருளின் அதிக வெப்பநிலை என்பது மூலக்கூறுகளின் அதிகமான இயக்க ஆற்றலைக் குறிப்பிடுவதாகும்.
• பொருளின் வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி வெப்பநிலைமானி ஆகும்.
• வெப்பத்தால் சீராக மாறும் பொருள்களின் பண்புகளை அளவிட்டு, பல்வேறு வகையான வெப்பநிலைமானிகளை அமைக்கலாம்.
• சாதாரண வெப்பநிலைகளை அளவிட பாதரச வெப்பநிலை மானிகளே அதிகம் பயன்படுகின்றன.
• திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் ஆகும்.
• பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது.
• சிறிதளவு வெப்பநிலை உயர்ந்தாலும், பாதரசம் சீராக விரிவடையும்.
• பாதரசத்தின் கொதிநிலை 357 டிகிரி சென்டிகிரேட்/ உறைநிலை - 39 டிகிரி சென்டிகிரேட்.
• ஆண்ட்ரூஸ் செல்சியஸ் என்பவர் வெப்பநிலையை அளவிடுவதற்கு செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.
• மனிதனின் இயல்பு வெப்பநிலை 36.9 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
• உறைகலவையில் உப்பும் பனிக்கட்டியும் 1:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
• உறைகலவையின் வெப்பநிலை 23 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
• வெப்பப்படுத்துவதால் நீளத்தில் ஏற்படும் மாற்றம் நீள்விரிவு எனப்படும்.
• பரப்பில் ஏற்படும் மாற்றம் பரப்பு விரிவு எனப்படும்.
• பருமனில் ஏற்படும் மாற்றம் பரும விரிவு எனப்படும்.
• நீராவி என்ஜின் முதன்முதலில் தாமஸ் நியூ கமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஜேம்ஸ்வாட் என்பவரால் திருத்தி வடிவமைக்கப்பட்டது.
• ஒரு வாயுவிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அப்பொருளின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
• வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கும். வெப்பநிலை குறையும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறையும்.
• கலத்தின் சுவர்களில் ஓர் அலகு பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் ஆகும்.

No comments:
Post a Comment